கோயில்கள்

கோயில்கள்  
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று, கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழர் மரபு. வீரமாங்குடியை பொறுத்த வரையில் கோயில்களின் ஊர் என்றே சொல்லலாம். ஏனெனில் தெருவுக்கு ஒரு கோயில் இங்கு உண்டு.

  • பாலா கணபதி பாலா முருகன் கோயில் - மந்தைவெளி
  • திரௌபதி அம்மன் ஆலயம் - மந்தைவெளி
  • பேச்சியம்மன் ஆலயம் - கொள்ளிடக்கரை 
  • ஆலமர பிள்ளையார் - கொள்ளிடக்கரை
  • கருப்பையா சாமி - குதிரை கோயில் தெரு 
  • பிள்ளையார் கோயில் - தெற்கு தெரு, நடுத்தெரு, புதுதெரு
  • வஜ்ரகண்டேஸ்வரர் ஆலயம் - தெற்கு தெரு
  • செல்லியம்மன் ஆலயம் - அய்யனார் தெறிச்சி
  • காளி கோயில் - அய்யனார் தெறிச்சி
  • ஐய்யனார்  கோயில்  - அய்யனார் தெறிச்சி
  • அன்ன மடம் - வடக்கு தெரு 
  • ஓம்சக்தி ஆலயம் - தெற்கு தெரு 
  • வடலூர் அடிகளார் ஆலயம் - குதிரை கோயில் தெரு
  • பேச்சியம்மன் ஆலயம் - கொள்ளிட கரை 
  • இயேசு கிறிஸ்து ஆலயம் - இந்திரா நகர்
  • முருகன் கோயில் - தேவன்குடி
  • சிவபெருமான் ஆலயம் - தேவன்குடி
  • மகா மாரியம்மன் ஆலயம் - மணலூர்
பாலா கணபதி பாலா முருகன் கோயில்
  •  வீரமாங்குடி மந்தைவெளியில் அமைந்துள்ளது பாலா கணபதி பாலா முருகன் கோயில்
  • இங்கு நடைபெறும் சோமவாரம் நிகழ்ச்சி பிரபலமான ஒன்று, ஒரு மாத காலம் நடக்கும் சோமவாரம் விழாவில் ஒவ்வொரு வீட்டை சேர்ந்த குடும்பத்தாரும்
  •  நாள் ஒன்றுக்கு படையல் வைத்து பக்கதர்கள் அனைவருக்கும் சுண்டல் வழங்குது சிறப்பான ஒன்று.
  • இறுதி நாளில் மந்தை வெளியில் அமைக்க பட்ட சுடலை மரத்தை தீயிட்டு கொளுத்தி கொண்டாடுவர்.
  • மார்கழி மாதத்தில் இந்த கோயிலில் அமைக்கபடும் ரேடியோ செட் பக்தி பாடல்கள் மந்தை வெளி முழுதம் சத்தம் எழுப்பி உற்சாகம் பரப்பும் ஊர் மக்களுக்கு.
எங்க குல சாமி - கருப்பசாமி


  • ஒவ்வொருவருக்கும் ஒரு குல சாமியுள்ளது அந்தவகையில் எங்க குல சாமி கருப்பசாமி
  • கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
  • தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராம கோவில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.
  • குலதெய்வம் பொதுவாக மூலம் ஒரு இடம் என்றால் அதை வரவழைத்து ஆலயம் எழுப்புவது அக்கால நடைமுறையில் ஒன்று. ஏன்னென்றால் குலதெய்வ கோயில்  பல மயில்களுக்கு அப்பால் இருக்கும் போக்குவரத்து வசதி இல்லாத கால கட்டத்தில் செல்வது சிரமம். இன்னொன்று குலதெய்வம் தங்கள் அருகிலே இருந்து அருள்பாலிக்க எண்ணி அந்த அந்த ஊர்களில் வரவழைத்து ஆலயம் அமைப்பர்.

  • இங்குள்ள கருப்பசாமி மூலம் ஒட்டகுத்தூர் அரியலூர் அருகில் உள்ளது, அங்கிருந்து வரவழைத்து இங்கு ஆலயம் எழுப்பி உள்ளனர்.
  • இவரின் வாகனம் குதிரை என்பதால், இந்த ஆலயம் அமைந்துள்ள தெரு குதிரை கோயில் தெரு என அழைக்கப்படுகிறது
கருப்புசாமி வாகனம் குதிரை
    • இவரின் தோற்றம் பெரிய மீசை, கையில் பெரிய அருவாள் கொண்டு, கண்களை முழித்தும் இருக்கும். இவர் இரவு நேரங்களில் ஊரை காவல் காக்க வெள்ளை குதிரை வளம் வருவார் என்கிற ஐதீகம் உள்ளது.
    வஜ்ரகண்டேஸ்வரர் ஆலயம் 



    சிறப்பு 
    • 500 வருடங்களுக்கு முன் பழமையானது 
    • தல விருச்சம் :வில்வம்
    • சிவராத்திரியில் விசேஷ பூஜை நடைபெறும்
    • ஐப்பசியில் அன்னாபிஷேகம்  நடைபெறும்

    தலவரலாறு 
    • சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்படியான வரம் பெற்றிருந்த வஜ்ரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அவனுடன் சண்டையிட்டும் வெற்றி பெற முடியவில்லை. அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், சிவனடியார் ஒருவரை அசுரனிடம் அனுப்பினார். அவர் அசுரனுடன் போர் வீரன் போல சண்டையிட்டு அழித்தார். இறக்கும் நேரத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன், சிவனிடம் மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயரால் "வஜ்ரகண்டேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார். வீரனாக வந்த அடியாரால் அசுரன் அழிந்ததால் தலத்திற்கு "வீரமாங்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.
    தத்ரூபமாக அமைந்துள்ள ஞான பழக்கதை
     தலச் சிறப்பு
    • இங்குள்ள நவக்கிரக சன்னதியில் எண்கோண வடிவ பீடத்தின் மீது, அனைத்து கிரகங்களும் தங்களின் வாகனத்தில், மனைவியுடன் தம்பதியராக அமர்ந்துள்ளது சிறப்பு.
    • ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இந்த சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். 
    மேலும் தகவல்களுக்கு.

     ஓம்சக்தி ஆலயம்

    • அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் மேல்மருவத்தூரில் இருந்து வரவழைக்கப்பட்டு இங்கு ஆதிபரசக்திக்கு ஆலயம் எழுப்பியுள்ளனர்.
    • வஜ்ராகண்டேஸ்வரர் ஆலய முகப்பில் கம்பீரமாய் எழுந்தருளுகிறாள் சக்தி.
    • இங்கிருத்து மேல்மருவத்தூருக்கு பக்கதர்கள் வேண்டிக்கொண்டு நடை பயணம் வருடா வருடம் மேற்கொள்வது சிறப்பு.
    • வெள்ளிகிழமைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை சிவப்பு நிற ஆடை அணிந்து 108 போற்றி கூறி ஆராதனை நடைபெறுவது வழக்கம்
    திரௌபதி அம்மன் ஆலயம்
    பஞ்சபாண்டவர்கள் அமர்ந்துள்ள காட்சி சிலையாய்
    திரௌபதி அம்மன் ஆலய முகப்பு
    • இவ்வூரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா, சுற்றுவட்டார கிராமங்களில் வெகு பிரசித்தம்.
    • திருவிழா ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கோயில் பூசாரியார் தன் குழுவினருடன் மகாபாரதக் கதையை பாட ஆரம்பித்துவிடுவாராம். 
    • பம்பை, உடுக்கை முழங்க அவர் கதை சொல்லும் பாணி அலாதியாக இருக்குமாம். ""கதை துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே பம்பை ஒலிக்கத் துவங்கிவிடும்; அதன் கம்பீரமான ஒலி கிராமம் முழுவதும் கேட்கும். 
    • கிராமத்தினர் இரவு உணவை முடித்துக் கொண்டு கதை கேட்கச் சென்றுவிடுவர். திருவிழா நெருங்க இருக்கும் நாட்களில் மதிய நேரத்திலும் மகாபாரதக் கதை நடைபெறும். இதை உறுமக் (மதியம்) கதை என்று கூறுவோம்.
    • ஏழு நாட்கள் நடைபெறும் தேர் திருவிழாவும் வாணவேடிக்கையும் காண கண் கோடி வேண்டும்.
    செல்லி அம்மன் ஆலயம்



      • செல்லியம்மன் ஆலயம் வீரமாங்குடியில், அய்யனார் தெரிச்சியில் அமைந்துள்ளது சமீபத்தில் புதிபிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடந்து இப்போது பரந்த நிலப்பரப்புடன் விசாலமாக காட்சி அளிக்கிறது.
      • கிராமத்தின் எல்லையில் காக்கும் தெய்வமாக இருக்கிறாள் ஒரு அம்மன். அவளை எல்லையம்மன் என அழைக்கிறார்கள்.
      • அந்த எல்லை அம்மன் செல்லியம்மன் பெயரில் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள்.
      • ஒருகாலத்தில் செல்லியம்மன் ஆலயத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்று வந்தன. தேரோடும் வீதியெங்கும் மக்கள் திரண்டு சாமி கும்பிட்டு வந்தார்கள். "ஊருணி பொங்கல்' என்றும் "ஒப்பில்லாப் படையல்' என்றும் செல்லியம்மனுக்குப் படைத்தனர். இன்று தேரும் இல்லை, திருவிழாவும் இல்லை என்றாகிவிட்டது. 
      • தன்னைத் தேடிவந்து தரிசிப்பவர்களுக்கு நன்மையே செய்கிறாள் செல்லியம்மன்.
      • ராகுகாலத்தில் தீபமேற்றுவது, வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்வது, எல்லாம் தொடர்ந்து நடக்கின்றன.
      • பக்தர்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேற்றித் தருவதில் அன்னைக்கு நிகர் அன்னையே.
      அன்னமடம்


      • இங்குள்ள அன்ன மடம் பிரசித்தி பெற்ற ஒன்று
      • இங்கு சாமியார்கள் வந்து தங்கி இளைப்பாறவும், அவர்களுக்கு உன்ன உணவும் கிடைக்கும்படி அக்காலத்தில் முன்னோர்கள் அமைத்தால் இது அன்ன மடம் என பெயர்பெற்றது.
      • இங்கு விநாயகர் கோயிலும் அமைத்துள்ளது.
      • சித்திரை மாதத்திலே சிறு தொண்டர் நாடகம், மூன்று நாட்களுக்கு நடக்கும்.
      • சித்திரா பௌர்ணமி அன்றுஎங்கள் பக்கத்துக்கு வீட்டு தாத்தா பிச்சை வாண்டையார், கையில் தெய்வத்தை ஏந்தி ஊரெங்கும் சாமி ஊர்வலம் வருவார். அன்றைய தினமே அன்ன மடத்தில் ஊருக்கே அன்னம் சமைத்து பரிமாறுவது பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்று.
      தெற்குத்தெரு பிள்ளையார்
      • இங்கு இருக்கும் பிள்ளையார் கோயிலில் மடம் ஒன்று அமைத்துள்ளனர்.
      • இங்கு ஏகாதசி அன்று பூஜை நடப்பது பிரபலமான ஒன்று  
      • ஒருகாலத்தில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் "பக்த ருக்மாங்கதா' நாடகம் இங்கு நடக்கும்.
      • மெலட்டூர், சாலியமங்கலம் பாகவதமேளா நாட்டிய பாணியில் நடந்த இந்த நாடகத்தைக் காண ஏராளமான கூட்டம் வரும். 
      • தைபொங்கலில் காணும் பொங்கல் அன்று இந்த  கோயில் முன்பாக பல்வேறு கிராம விளையாட்டுக்கள் அரங்கேறுவது வழக்கம், உதாரணமாக உரி அடித்தல், வலுக்கு மரம் ஏறுதல் என கலை கட்டி இருக்கும்.
      காளி அம்மன் கோயில்
                                
        • காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம், அனுக்கிரக தெய்வம். துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம்.
        • உலகையே தன் கைக்குள் கொண்டுவர அசுரபலம் கொண்ட அரக்கன் சிவனை நோக்கி பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிகின்றான்.சிவன் உடனே அந்த வரத்தை வழங்குகிறார், அசுரன் உடனே சிவனையே கொல்ல முற்படுகிறான்.
        • பார்வதி தேவி துர்கையாக மாறி அவனை அழிக்கிறாள். அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன் இரத்தத்தின் வழயாக மீண்டும் அசுரனாக உருவெடுக்ககூடாது என்று எண்ணிய துர்க்கை அம்மன் சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறுஞ்சு கட்டளையிட்டாள். அவ்வாறே உறிஞ்சிய துளிகள் கீழே விழும் போது காளியம்மனாக உருவெடுத்தாள்.
        • வீரமாங்குடியில் ஐய்யனார் தெரிச்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
        • வீரமாங்குடியில் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரே கோயில்.
        • மடம் கிராமத்திற்கும் வீரமாங்குடிக்கும் இடையில் மிகவும் அமைதியான பசுமையான இடத்தில காளி அம்மன் அருள்பாளிகின்றாள்.
        • ஆடி வெள்ளியிலும் ஆவணி ஞாயிறுகளிலும் அம்மனுக்கு மாவிளக்கு இட்டு வழிபடுவது சிறப்பு.
          பிரசித்தி பெற்ற மணலூர் மகா மாரியம்மன் கோயில்

          •  வீரமாங்குடியில் இருந்து 3 கி மீ தொலைவில் உள்ள மணலூர் கிராமத்தில் அமைந்துள்ள மணலூர் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. 
          • இது வீரமாங்குடி மக்களின் தெய்வத்திருகோயில் ஆகும்.
          • இங்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும் 
          • அவ்விழாவிற்காக இங்கிருந்து பால்குடம், மற்றும் அலகு குத்தி காவடி எடுப்பர் 
          பேச்சியம்மன் ஆலயம் 


          • ஊரில் உள்ள மக்கள் பல்வேறுபட்ட குலங்கள் கொண்டுள்ளனர், ஒவ்வொரு குலதினர்க்கும்  ஒவ்வொரு குல தெய்வ ஆலயங்கள் வைக்கப்பட்டுள்ளன.
          • பேச்சியம்மன் ஆலயமும் ஒரு பிரிவு சாராரால் குலதெய்வமாக கோயில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
          • ஆலமரங்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் அன்னை அருள்பாளிப்பதில் ஊர் மக்களின் குறைகள் கொள்ளிட ஆற்றோடு அடித்து செல்லபடுவதில்  ஐயமில்லை

          ஆலமர பிள்ளையார் கோயில்


          • கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலை சுற்றி ஆலமரங்கள் சூழ்ந்து இருக்கும்.
          • பொதுவாக நாங்கள் சிறு வயதில் ஆடி 18 அன்று சப்பர தேர் இழுத்துக்கொண்டு கொள்ளிடம் செல்லும்போது. முதலில் வணங்கி செல்லவது இங்கு தான்.
          • மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் வழிப்போக்கர்களுக்கு இளைபாறுதல் தர ஆலமர நிழலில் கம்பீரமாய் அருள்பாளிகின்றார் . 

          1 comment:

          1. சகோ தஞ்சை அருகே உள்ள ஒரு ஆலயத்தை கண்டுபிடிக்க உதவ வேண்டுகிறேன்

            ReplyDelete