மண் மைந்தர்கள்

வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்
  • ஒரு ஊர் வளமையுடனும்புகழுடனும் இருக்க மண்ணை சார்ந்த மனிதர்களும் ஒரு காரணம்.
  • பொதுவாக படிப்புதொழில்வேலைவாய்ப்புபொருளாதாரம் தேடி மண்ணை விட்டு மனிதன் இடம்பெயருவது வாடிக்கை.
  • கிராமங்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவதும்மக்களின் உயிர் மூச்சாய் இருக்கும் உணவைஉற்பத்தி செய்வதுமான  விவசாய தொழில் இன்று போதுமான ஆட்கள் இன்றியும்நீர் பாசன வசதி குன்றியும்நலிவடைந்து வரும் நிலையில்மாற்று காரணி தேடி மண்ணை விட்டு இடம்பெயர்வோர் இன்று அதிகம்.
  • அத்தகைய எந்த மாற்றம் வந்தாலும் மண்ணை மக்களையும் பிரியா மண்ணின் மைந்தர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள்.
  • இவர்களின் பிறப்புவளர்ப்பு மட்டும் இன்றி இறப்பும் பிறந்த மண்ணிலே வேண்டும் என்ற கொள்கைகளோடு வாழ்வார்கள்.
  • சொந்த பிள்ளை வீடேயானாலும் நகர்புறத்தில்  இவர்களால் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்குவது கடினம்.
  • விஞ்ஞான வளர்ச்சியாலும்அறிவியல் முன்னேற்றத்தினாலும் தொழில் துறையில்நகர்ப்புறங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தாலும். கிராமங்களின் நிலை தாழ்ந்து போகாமல் இருக்க முதுகெலும்பாய் இருக்கும் காரணிகள் இவர்கள்.
  • இவர்கள்தான்  நம் மண்ணின் மைந்தர்கள். அத்தகைய நம் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்களை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரைதான் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்.


*******************************************************************************************


முதலில் நாம் பார்க்க இருப்பது 
திரு.
கணேசன் அவர்களை


  • வடபாலிமங்கலம் ஆலையில் ஏழு ஆண்டுகள் அலுவலர் பணி.
  • வீரமாங்குடி கிராம நிர்வாகத்திற்காக கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரூ.1700 சம்பளத்திற்கு இவர் ஆற்றியது பணி அல்ல அர்பணிப்பு என்றே சொல்லலாம்.
  • தண்ணீர் குழாயில் தண்ணீர் வரவில்லை, தெரு விளக்கு எரியவில்லை, மின்சாரம் துண்டிப்பு என எத்தனை பிரச்சனைகள் என்றாலும் கிராம பஞ்சாயத்து தலைவரை விட, கணேசனை கூப்பிடுங்கப்பா என உரிமையோடு கிராம மக்கள் அறிந்த ஒருவராய் இருந்தது இவரது உழைப்பிற்கு எடுத்துகாட்டு.
  • ஞாயிற்று கிழமைகளில் மாலையில்   தமிழ் திரைப்படம் பார்க்க, வெள்ளிகிழமைகளில் இரவில் ஒளியும் ஒலியும் பார்க்க கூட்டம் கூட்டமாய் கூடும் கிராமமக்களின் எதிர்பார்க்கும் முகமாய் மந்தவெளியின் தொலைகாட்சி இயக்குனராய் நன்கு அறியப்பட்டவர். 
  • இதுமட்டுமில்லாது வடக்கு தெரு அன்னமடத்தில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும்  மேடை நாடகத்தில் இவரது பங்களிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. சிவபுராணம், ராமாயணம், மகாபாரதம் என அத்தனை புராணங்களும், இதிகாசங்களும் இவருக்கு அத்துபுடி.
  • எண்பது வயதை கடந்தும் இன்றும் சைக்கிளை மிதித்து செல்லும் உடல் நலம் இறைவனின் ஆசிர்வாதம். இன்று இவரது துணைவியாருடன் இயற்கை சூழ்ந்த வயல்வெளியில் அமையபெற்ற தனது இல்லத்தில் வசித்து வருகிறார்.

*******************************************************************************************
 இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது திரு.கலியபெருமாள் அவர்களை

  • மண்ணின் மைந்தர்கள்
  • வீரமாங்குடி சின்னத்தெரு திரு.கலியபெருமாள் வாண்டையார் அவர்கள்
  • ஐஸ் தாத்தா என செல்லமாக குழந்தைகளாலும் பள்ளி மாணவர்களாலும் அழைக்கப்பட்டவர்.
  • 90ஸ் கிட்ஸ் மிட்டாய்களை‌ வீரமாங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.
  • தள்ளாத வயதிலும் இறக்கும் தருவாயில் கூட குழந்தைகளின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரமாங்குடி மந்தைவெளியில் கிட்டதட்ட 30வருடங்களுக்கு மேல் வணிகம் செய்து வந்த பெருமை இவரையே சேரும்.
  • இவர் வெளியில் செல்லும் போது கூட மக்கள் பயனுறும் வகையில் கடையை மந்தைவெளியில் திறந்து வைத்தே சென்று விடுவார்.
  • மக்கள் தேவையான பொருட்களை எடுத்து உரிய சில்லறையை வைத்து விட்டு செல்வர் அந்த அளவிற்க்கு வணிகத்தில் நம்பிக்கையும் நாணயத்தையும் விதைத்த மண்ணின் மைந்தர்களின் ஒருவர்.

*******************************************************************************************

  • இது போன்ற நம் மண்ணிற்கு வரமாயும் முதுகெலும்புமாயும் வாய்க்க பெற்றவர்களால் தான் நம் கிராமம் இன்றும் முதன்மை கிராமமாய் இருப்பதில் ஐயமில்லை - மிறன்.ஜி

No comments:

Post a Comment