ஊர்

வீடுகள்..
  •  வீடுகள் தோறும் திண்ணை வைத்து கட்டப்பட்டு இருக்கும்.
மாடம் வைத்த நுழைவாயில்
  • அக்காலத்தில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல எல்லா வீடுகளிலும் திண்ணை வைத்து கட்டுவது மரபு. அத்தகைய மரபில் கட்ட பட்ட வீடுகள் இங்கு அதிகம். வீடுகளின் கூரைகள் சீமை ஓடுகளால் கட்ட பட்டு இருக்கும். இந்த சீமை ஓடுகள் வளைவாக இருப்பதால் மழை நீர் வழிந்தோட ஏதுவாகவும். சூரிய வெப்பம் வீட்டின் உட்புறம் பாதிக்காமல் எப்போது குளிச்சியான தட்ப வெப்ப நிலையை பரவ செய்யும்.
  • அக்காலத்தில் இத்தகைய சீமை ஓடுகளால் கட்டப்பட்ட வீடுகளே அதிகம். 
  • வீட்டு நுழை வாயில் இருமருங்கிலும் மாடம் இருக்கும். அந்தி சாய்ந்த வேளைகளில் இந்த மாடங்களில் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சியம் சேரும் எனவும், அந்த ஒளி, வழிபோக்கர்களுக்கு ஒளி தருவ தாகவும் அமையும் என்று மூதாதையர் கருத்து. 
  • வாசற் கதவு அகண்டதாகவும் பருமனாகவும் மரத்தால் பலவித கலை நயத்தோடு உருவாக்க பட்டவையாக இருக்கும்.
  •  முற்றம் நான்கு அல்லது மூன்று மருங்கையும் ஒன்றிணைத்து, வீட்டின் உட்புறம் சூரிய ஒளி படுமாறு வாசல் அமைந்து இருக்கும் 
  • மழை பொழியும் போது மழைநீர் வீட்டின் உட்புறம் வாசலில் வீழ்வது ரசிக்க தக்க ஒன்றாகும். அம்மழை நீர் சீமை ஓடுகளில் கலந்து மண்வாசனையை வீடு முழுதும் பரவவிடும். 
தெருக்கள்
  • சின்ன தெரு
  • நடுத்தெரு
  • வடக்கு தெரு
  • தெற்கு தெரு
  • சந்து தெரு (இரண்டு சந்து தெருக்கள்)
  • கீழ தெரு
  • மேல தெரு
  • குதிரை கோயில் தெரு
  • புது தெரு
  • இந்திரா நகர் 
  • கணபதி நகர் (புதிதாய் உருவாக்கப்பட்டது )

       சின்ன தெரு..
      ஓடி ஆடி விளையாண்ட  தெரு
      •  நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருக்கும் தெரு
      • சின்ன தெரு பரப்பளவிலும் குருக்களவிலும் சிறியதாய் இருப்பதால் இதற்கு சின்ன தெரு என்று பெயர்.
        மந்தைவெளியில் ஆரம்பித்து மேலத்தெருவில் முடிகிறது இதன் நீளம். மத்தியில் நடுத்தெருவையும்
      • தெற்கு தெருவையும் சின்ன தெருவோடு இணைக்க சந்து தெரு ஒரு பாலமாய் உள்ளது.
       தெற்குத் தெரு.. 

      • தெற்குத்தெரு ஊருக்கு  தெற்கு புறத்தில் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
      • இது ஒரு பேருந்து வழிப்பாதை என்றும் சொல்லலாம் 
      • அதாவது மடம் வழியே தஞ்சைக்கு செல்லும் பேருந்து, அணைக்குடி மற்றும் திருமானூர் செல்லும் பேருந்துகள் இவ்வழியே செல்லும்.
      • இது மந்தைவெளியில் ஆரம்பித்து மேலதேருவில் முடிகிறது.
      • இங்கு இருக்கும் பிள்ளையார் கோயிலில் மடம் ஒன்று அமைத்துள்ளனர்.
      • இங்கு ஏகாதசி அன்று பூஜை நடப்பது பிரபலமான ஒன்று
       மேலத்தெரு.. 
      • ஊருக்கு மேற்கு புறத்தில் இருப்பதால் இதற்க்கு மேலத்தெரு என்று பெயர்
      • இந்த தெருவில் தான் தெற்குத்தெரு, சின்னத்தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு ஆகியவை முடிகின்றன.
      • இது தெற்குத்தெருவில் ஆரம்பித்து வடக்குத்தெருவில் முடிகிறது.
      • இங்கு மேலதெரு பிள்ளையார் கோயில் உள்ளது.
      வடக்குத்தெரு
      • இது ஊருக்கு வடக்கு புறத்தில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.
      • இது பரப்பளவில் மற்ற தெருக்களை விட அகண்டு காணப்படுகிறது 
      • இதன் தொடக்கத்தில் தான் பிரசித்தி பெற்ற வஜ்ரகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் ஓம்சக்தி ஆலயம் உள்ளது.
      • இங்குள்ள அன்ன மடம் பிரசித்தி பெற்ற ஒன்று
      • இதில் சித்திரா பௌர்ணமி அன்று நடைபெறும் சித்திரை விழாவில் இங்கு அன்னம் தயார்செய்து ஊர்முழுக்க அன்னதானம் செய்யும் விழா ஒரு பாரம்பரிய நிகழ்வு.
         
      • இங்கு சாமியார்கள் மற்றும் வழிபோக்கர்கள் வந்து தங்கி இளைப்பாறவும், அவர்களுக்கு உன்ன உணவும் கிடைக்கும்படி அக்காலத்தில் முன்னோர்கள் அமைத்தால் இது அன்ன மடம் என பெயர்பெற்றது.
      • இங்கு 80களில் தங்கி இருந்த சாமியார் அனைவருக்கு வாய்பாடு மற்றும் சில உபநிடதங்கள் கற்று தந்தார். அவரோடு திண்ணை பள்ளி முடிவுக்கு வந்தது வருத்தமான ஒன்று.
      கணபதி நகர்
      • வீரமாங்குடியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்பு.
      • இது விளைநிலமாக இருந்தது. இப்போது குடி இருப்பாக உருமாறியுள்ளது.
      • இங்கு பெரும்பாலும் அரசாங்க உதவியுடன் கட்டப்பட்ட மனைகள் உள்ளன.
      • இந்த நகருக்கென்று பிரத்யேகமாக குடி நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
      சுமை கல்
      •  அக்காலத்தில் வாகன வசதி இல்லாததால் வழிப்போக்கர்கள் நடந்து
        செல்லும் போது இளைப்பாற வசதியாய் வழியெங்கிலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் அமைக்கபட்டுள்ள சுமை தாங்கி கற்கள் தான் சுமை கல் என அழைக்கப்படுகின்றன.
      • பொதுவாக சுமை தூக்கி செல்பவர்கள் பாரம் தாங்காது சிறிது இறக்கி வைத்து பின் மீண்டும் தூக்கி செல்வது வழக்கம்.
      • அவ்வாறு செல்கையில் உடன் யாரும் இல்லாது தனிமையில் சென்றால் சுமை இறக்கி மீண்டும் ஏற்றி விட ஒரு துணை இல்லாது இந்த உயரமான சுமைதாங்கி கற்களில் வைத்து இளைப்பாறி விட்டு அவர்களே எடுத்து செல்ல வசதியாய் அமைந்துள்ளன இந்த சுமை கல்.
      • இதை யாரேனும் ஒரு பெருநில கிழார் தானமாக வழங்கி இருப்பார். அதற்காக அவரது பெயர் இந்த கல்லிலே உபயம் என்ற பெயரில் கல்வெட்டாய் பதித்து இருக்கும்.
      • இப்போது வாகனங்கள் பெருத்து விட்ட காலத்தில் இவைகள் பெரும்பாலும் அகற்ற பட்டு வருகின்றன. ஆனாலும் இன்னமும் கம்பீரமாய் கொள்ளிட கரையில் காண கிடக்கிறது இந்த சுமை கல்.

        அங்கன்வாடி (பால்வாடி)

        •  இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் PLAY SCHOOLKINDER GARDEN, DAY CAஎன பெருகிவரும் சூழலில், 
        • அக்காலத்திலே கிராமபுற பாலகர்கள் அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்டோர்களுக்கு என்று மாநில அரசால் தொடங்கப்பட்டதுதான் இந்த அங்கன்வாடி. கிராமப்புற வலக்குப்படி பால்வாடி என்று சொல்வர். 
        • இங்கு பாலகர்களுக்கு தமிழ் எழுத்துக்கள், குழந்தை பாடல்கள் முதலியவை கற்பிக்கப்படுகின்றன. 
        • இவர்கள் ஊட்டம் பெற ஊட்ட சத்து மாவு முட்டை போன்ற திட உணவுகளும், உறங்கும் வசதியும் கொண்டதாகவும் அமைந்துள்ளது சிறப்பு மிக்க ஒன்று.
           வீரமாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி

          • இந்த பள்ளிகூடத்தில் தான் 3ஆம் வகுப்பில் இருந்து  5 வகுப்பு வரை படித்தேன் என் சகோதர சகோதரிகளும் படித்த பள்ளி இது.
          • வீரமாங்குடி மந்தைவெளியில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகின்றன
          • இது மந்தை வெளியில் அமைந்துள்ளதால் உடற்பயிற்சியின் போது மாணவர்கள் விளையாட ஏற்ற களமாக பறந்து விரிந்த மந்தைவெளி ஒரு வரபிரசாதமாய் விளங்குகிறது.
          அரசு மேல் நிலை பள்ளி


          • வீரமாங்குடியில் அரசு உயர்நிலை பள்ளியாக இருந்து சமீபத்தில் மேல்நிலை பள்ளியாக உயர்த்த பட்டுள்ளது. நாங்கள் படித்த காலத்தில் 100% தேர்ச்சியை தொடர்து ஆறு ஆண்டுகள் மேலாக பெற்ற 
            நுழைவாயில் உட்புறம்
            சிறப்பைஉடையது.
          • இங்கு உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் இடவசதி குறைவால் முதலில் கீற்று கொட்டகையில் சில வகுப்புகள் இயங்கப்பட்டன. பின் தமிழக அரசின் உதவியோடு இன்று மேம்படுத்த பட்ட ஒரு அரசு மேல்நிலை பள்ளியாக இன்று தரம் உயர்ந்துள்ளது.
          • கணிபொறி வசதி, விளையாட்டு மைதானம், என அகண்ட இட வசதியுடன் விசாலமாக காட்சி அளிக்கிறது.
          • சுற்று புற கிராமங்களான சோமேஸ்வரபுரம், மடம், தேவன்குடி, மணலூர், செம்மங்குடி மற்றும் அணைக்குடி சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியின் மூலம் கல்வி கற்று பலன் பெறுகின்றனர்.
            தொழில் 
            • இங்கு விவசாயம் தான் பிரதான தொழில்.
             
            வெல்லத்தயாரிப்பில் எங்கள் அப்பா. 
            • இங்கு நில உரிமையாளர்களே களத்தில் இறங்கி எந்த வித பாகுபாடு இன்றி ஊழியர்களோடு ஊழியர்களாய் வேலை பார்ப்பது கிராமங்களில் வாடிக்கையான ஒன்று.
            • நிலகிளார்கள் பெரும்பாலானோர் சொந்தமாக ஆலை (கொட்டகை) வைத்துள்ளனர். இந்த ஆலையில் நீர்பாய்ச்ச மின்சார மோட்டார், கரும்பை பிழியும் எந்திரம், பெரிய கொப்பரை, பாகை உலரவைக்க மரத்தொட்டி என சகல பொருட்களும் வைத்திருப்பார்கள்  

            ஊரில் உள்ள எங்கள் ஆலை (கொட்டகை)

            கரும்பு சாறு எடுக்க உதவும் எந்திரம் 

            இயந்திரம் மூலம் சாறு எடுக்க படுகிறது
            • காவிரிப்படுகையில் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து எந்திரங்கள் மூலம் சாறுபிழியப்படுகிறது. மின்சார மோட்டர் மூலம் சாறு பிழியப்பட்டு தொட்டியிலும் அதன் சக்கைகள் (கோது) பிரிதேடுக்கபட்டு காய வைத்து. சக்கைகளை எரிபொருளாகவும் உபயோகம் செய்கின்றனர்.


            • பெரிய கொப்பரையில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாறு நிரப்பப்பட்டு, கரும்புச்சக்கைகளால் எரியும் அடுப்பில் கொதிக்கவைக்கப்படுகிறது.
            • கரும்புச்சாற்றில் உள்ள அழுக்குகளை எடுக்க சோடா உப்பு, குருணை ஹைட்ரஸ் போன்றவற்றை சிறிதளவு சேர்க்கிறார்கள்.

            • சாறுகொதித்து பாகாய் மாறும் தருணத்தில் அச்சுக்களில் ஊற்றினால்
            • அருமையான அச்சு வெல்லம் தயார்.பெரிய மர தொட்டியில் ஊற்றி பாகை ஆறவைத்து துடுப்பால் கிளறினால் சர்க்கரை தயார். மிதமான பதத்தில் உருண்டை
            • அச்சுக்களில் ஊற்றினால் உருண்டை வெல்லம் தயார்.
            • தயாரித்த வெள்ளத்தை சாக்குகளில் எடை போட்டு விற்கின்றனர்
            பசுமையாய் காட்சிதரும் கரும்பு விளைந்த வயல்
            • பெரும்பாலும் கரும்பு, நெல் பயிரிடபடுகிறது. நீர் வசதிக்கு அருகிலே கொள்ளிட ஆறு இருந்தாலும் போதிய வாய்க்கால் வசதி இல்லாததால் சிறு மற்றும் பேரு நிலகிளார்கள் மின்சார மோட்டார் மூலம் நீர் பெற்று வரப்பு வாய்க்கால் அமைத்து பயிரடப்பட்ட பயிர்களுக்கு நீர் பாய்ச்சி விவசாயம் செய்கின்றனர்.
            • கரும்பை பெரும்பாலும் அவரவர் வைத்திருக்கும் ஆலையில் சாறெடுத்து பாகு காய்த்து வெள்ளம் எடுக்கின்றனர். இங்கு  தயாரிக்கப்படும் வெல்லமும் சர்க்கரையும் சிறப்பாக பேசப்படுகிறது. காவிரிப்படுகையின் மண்வாகு சிறப்பாக இருப்பதால் தஞ்சை பகுதியில் உற்பத்தியாகும் வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும் தனியான மதிப்பு.
            • தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுத்தங்கம் என்றால் அச்சு வெல்லத்தையும், சர்க்கரையையும் குறிக்கும். வெள்ளைத்தங்கம் என்றால் சீனியைக்குறிக்கும். 
            நீர் பாசனம்
            • விவசாயத்திற்கு இன்றி அமையாதது நீர். என்னதான் வீரமாங்குடி காவிரிக்கும் கொள்ளிட ஆற்றுருக்கும் நடுவில் இருந்தாலும் இங்கு பெரும்பாலானோர் சொந்தமாகவே மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் இறைக்கும் எந்திரம் (பம்புசெட்டு) வைத்து நீர்பாசனம் செய்கின்றனர். 


            • பம்புசெட்டு மூலம் நீரை ஒரு அகண்ட தொட்டியில் விழுமாறு அமைத்து கொள்ளகின்றனர். மேலே உள்ள படம் தான் ஊரில் எங்கள் அப்பா அமைத்துள்ள நீர் பாசன தொட்டி .
            •  சிமென்ட் மூலம் அமைக்கப்பட்ட நீண்ட நீர்பாசன வாய்க்கால். இதன் வழியே வரும் நீர் வாய்காலில் வந்து விழும். பார்க்க கீழே உள்ள படத்தை,
            •  அகண்டவாய்க்கால் வரும் நீர், விளைநில மண்ணால் உருவாக்கப்படும் வரப்பு மூலம் பயிரடப்பட்டவிளைநிலத்திர்க்கு கொண்டு செல்ல படுகிறது.
              இது மட்டும் அல்லது இங்கு உள்ள வாய்கால் வரத்து ஆறுகலானது
              • மண்ணியாறு
              • தூரியாறு
              • வடகரை வாய்க்கால்
              • தென் கரை வாய்கால்
              மண்ணியாறு
              •  சோமேஸ்வரபுரம் வீரமாங்குடிக்கு இடையில் இந்த மண்ணியாறு உள்ளது.
              • 4-7-1973 அன்று அப்போதைய ஊராட்சி ஒன்றிய பெருந்தளைவராய் இருந்த ஆர்.வி. சௌந்தரராஜன் தலைமையில் அப்போதைய உணவுத்துறை அமைச்சராய் இருந்த மன்னை நாரயனசாமியால் இதன்மேல் பாலம் அமைக்க பட்டது.
              • எங்கள் தாத்தா காலத்தில் இங்கு வந்து ஆடி பெருக்கின் போது மணல்வெளியில் விளையாடி ஆற்றில் குளித்து செல்வார்கள் என எங்கள் ஆயா பழனியம்மாள் சொல்லி கேள்வி பட்டு இருக்கின்றேன்.



              ஆனால் இன்று இது ஒரு வாய்க்காலாய் மெலிந்து நீர் வரத்து இன்றி ஒரு ஆறு இருந்த சுவடே இல்லாது இருகின்றது.

              தூரியாறு


              • மண்ணியாற்றுக்கு சற்று முன்பாகவே உள்ளது தூரியாறு அதாவது சோமேஸ்வர எல்லை முடிந்து வீரமாங்குடி எல்லை தொடக்கத்திலே உள்ளது.
              • மண்ணியாறு, வடகரை வாய்க்கால், தென்கரை வாய்க்கால்  எல்லாம் ஜீவனை இழந்து சுவடுகள் மறைந்து கொண்டு இருக்கையில் இன்றும் நீர் வரத்து உள்ள வாய்கால் ஆறு என்றால் அது  தூரியாறு மட்டுமே.


              • சமீபத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் தடுப்புகள் நீக்கப்பட்டு செம்மை படுத்தபட்டுள்ளது.   
              கொள்ளிட அணைக்கரை  

              ஊர் எல்லையில் கொள்ளிட அணையின் தொடக்கம்
              •  ஊரின் மத்தியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை மீது நின்று பார்த்தால் கொள்ளிட ஆறு பறந்து திரிந்து இருக்கும்.
              கொள்ளிட ஆறு
              • கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் அகலம் கொண்ட மிக பெரிய ஆறு இது. பொதுவாக காவிரி, குடமுருட்டி ஆறுகள் அதிக கொள்ளளவு கொண்டதாய் இருக்காது. இங்கு அதிகபட்ச நீர் வரத்து இருந்தால் அது கிளை ஆறாரான கொள்ளிடதிர்க்கு திருப்பிவிடப்படும். எவ்வளவு நீரானாலும் கொள்ளுகிற இடம் என்பதால் இதற்கு கொள்ளிடம் என்று பெயர்.
              • கொள்ளிட ஆற்றை கடந்து அக்கறைக்கு சென்றால் பெரியமரை, ஏலாக்குறிச்சி ஊர்களை அடையலாம்.
              CRB சாலை  

              •  இந்த அணைக்கரை இப்போது பொது பணிதுரையால் CRB சாலை என்ற திட்டம் அமைக்கப்பட்டு, கல்லணை வரை போக்குவரத்து அணைகரையில் செல்ல ஏதுவாய் சாலை வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.
              • கிழக்கு புறம் அணைக்கரை நோக்கி செல்லும் சாலை 
              • மேற்கு புறம் கல்லணை வரை நீள்கிறது.
              • ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அளவு உள்ள அகல பாதையில் எதிர்புறம் வாகனம் வந்தால். ஒதுங்கி செல்ல ஏதுவாய் குறிப்பிட இடைவெளிக்கு வாகனம் ஒதுங்கி செல்லும் அளவு தளம் அமைத்துள்ளனர்.
              சாய்வு தளப்பாதை

              • தமிழ்நாடு அரசு பொது பணிதுரையால் நீர் வள ஆதர அமைப்பு காவிரி வடிநிலக் கோட்டம், தஞ்சாவூர் வெல்ல தடுப்பு பணிகள் 2010-11ல்  கொள்ளிட வலது கரை சாய்வு தளப்பாதை  அமைத்துள்ளனர்.
              • இந்த சாய்வுதளப்பாதை அணையில் இருந்து ஆற்றுக்கு இறங்கி செல்ல ஏதுவாய் அமைக்க பட்டுள்ளது
              • நீர் வரத்து அதிகப்படியாய் இருந்தாலும், நீர் கணிசமாக உயர உயர சாய்வு தளப்பாதை அகலம், அகல அகல நீரானது அணை  தாண்டி ஊருக்குள் வராதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
                 பேருந்து வசதி

                தஞ்சை to வீரமாங்குடி 

                வீரமாங்குடி - சோமேஸ்வரபுரம் - ஈச்சங்குடி வழியே திருவையாறு மார்க்கமாக தஞ்சை செல்ல இரண்டு பேருந்துகள் இயக்க படுகின்றன.

                • RA 28 (தனியார் பேருந்து)

                  • தஞ்சையிலிருந்து - வீரமாங்குடிக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படும் பேருந்து. முதலில் TTT 28 (திருவையாறு தியாகராஜர் டிரான்ஸ்போர்ட் என்பதை TTT) என இயங்கிய பேருந்து வேறு உரிமையாளர் கை மாறியதும்  RA 28 என மாறியது. 
                     
                • A 28 (அரசு பேருந்து)
                  • தஞ்சையிலிருந்து - வீரமாங்குடிக்கு 23கி.மீ தொலைவுள்ள தூரத்திற்கு தமிழக அரசால் இயக்கப்படும் பேருந்து A 28.
                  • பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயணம் செய்ய பேருதவி செய்யும் ஒரு எந்திரன்.

                • P 91 (அரசு பேருந்து)
                  • வீரமாங்குடி - மடம் - செம்மங்குடி - வைரவன்கோயில் வழியே திருவையாறு மார்க்கமாக தஞ்சை செல்ல இயக்கப்படும் பேருந்து.
                  • சமீபத்தில் கிராம மக்களின்   வேண்டுகோலுக்கிணங்க தமிழக அரசால் இயக்கப்பட்டுள்ளது.
                                                        

                கும்பகோணம் to வீரமாங்குடி
                  
                வீரமாங்குடி - தேவன்குடி - கணபதி அக்ரஹாரம் - சுவாமிமலை வழியே கும்பகோணம் செல்ல ஒரு பேருந்தும்
                • CRC 42 (அரசு பேருந்து)
                அணைக்குடி - வீரமாங்குடி - அய்யம்பேட்டை - பசுபதி கோயில்
                • திருமுருகன் BUS Service (தனியார் மினி பேருந்து)
                திருமானூர்  - வீரமாங்குடி - அய்யம்பேட்டை 


                •  கோல்டன் BUS Service (தனியார் மினி பேருந்து)
                  தொலைகாட்சி அறை 


                  • கிராமப்புறங்கள் பெரும்பாலும் தொலைதொடர்புகளிலும் வர்த்தகதொடர்புகளிலும் பின்தங்கி இருப்பதால் அரசாங்கம் பல்வேறு கிராமப்புற வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்ததுஅதில் ஒன்றுதான் கிராமங்களுக்கு தொலைக்காட்சி வழங்கும் திட்டம்.
                  • தொலைதொடர்புகளில் பின்தங்கி இருப்பதால்நாட்டுநடப்புகளை தெரிந்து கொள்ளவும்பொழுதுபோக்கிற்கும் இந்த திட்டம் கிராமப்புற மக்களுக்குஉபயோகமாக இருக்கும் படி மசோதா அமைக்கப்பட்டது.
                  வடக்கு தெருவில் உள்ள தொலைகாட்சி அறை
                  • அந்தந்த ஊருகளில் உள்ள பஞ்சாயத்து கட்டிடங்களில் இந்த தொலைகாட்சி அறை அமைக்கப்பட்டு மாலை நேரங்களில் மட்டும் ஒளிபரப்பப்பட்டது. ஏனெனில் பெரும்பாலும் தூர்தர்ஷன் அரசு நிறுவனம் மாலை நேரங்களில் மட்டுமே நிகழ்சிகளை தொடங்கும். ஞாயிறு கிழமை மட்டும் அதற்க்கு விதிவிலக்கு.
                  • நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வெள்ளிகிழமை ஒளிபரப்பான ஒளியும் ஒலியும்ஞாயிறு கிழமையில் ஒளிபரப்பான தமிழ் திரைப்படம்சனி கிழமைகளில்  ஒளிபரப்பான ஹிந்தி திரைப்படங்கள் ஏக பிரபலம்.
                  • ஹிந்தி மொழி புரியாவிடினும் பொழுதுபோக்கிற்காக பார்க்க ஆரம்பித்து பிடித்து போன ஒன்றாகிவிட்டது.
                  • என் இனிய இயந்திரா சுஜாதா நாடகம்பஞ்சு பட்டு பீதாம்பரம்சந்திரலேகா,மகாபாரதம்என தமிழ் மட்டுமல்லாது ஜுனூன்சமந்தர்ரிப்போர்ட்டர் என ஹிந்தி நாடகங்களும் பிரபலம்.
                  • ஆனால் இன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் தொலைகாட்சி தொல்லைக்காட்சி ஆகிவிட்டது.
                  நூலகம் 
                  • கிராமப்புற வளர்ச்சி திட்டங்களில் நூலகமும் ஒன்று. கிராமப்புற மக்கள் தினசரி நாளிதழில் தொடங்கி வார, மாத இதழ் மட்டுமல்லாது, பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை படிக்கும் வசதியில் அமைந்துள்ளது. 




                  • எங்கள் வீட்டில் தினசரி நாளிதழ் வாங்குவார்கள் அப்போது வெளியாகும் சிறுவர்மணி, சிறுவர்மலர் படிக்கும் போது தொடங்கிய புத்தகம் படிக்கும் ஆர்வம் நாளடைவில் ஊரில் தொடங்கிய நூலகம் மூலம் தொடர்ந்தது. 
                  • அப்போது மந்தைவெளியில் இருந்த பழைய கட்டிடம் சிதிலம் அடைந்து இருந்தாலும் புது கட்டிடம் தொடங்கும் வரை அதிலேயே தொடர்ந்து இயங்கி வந்தது. 
                  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இப்போது அரசு மேல்நிலை பள்ளிக்கு எதிர்புறம் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது.

                  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 


                  • அக்காலத்தில் பெரும்பாலும் கிராமபுறங்களில் மருத்துவம் பார்க்க வைத்தியர்கள் இருப்பார்கள் இவர்கள் பெரும்பாலும் மூலிகை எனப்படும் இயற்க்கை சார்ந்த மருந்துகளை மக்களுக்கு வழங்கி மருத்துவம் பார்த்து வந்தனர்.
                  • ஆங்கிலேயே ஆட்சிக்கு பிறகே ENGLISH மருத்துவம் இந்தியா முழுவதும் பரவியது. நாளடைவில் அது விஸ்வரூப வளர்ச்சியால் அதன் தேவை மக்களுக்கு அதிகமானது. கிராமப்புற மக்களுக்கு அவசர சிகிசைக்கென்றும் வசதி கிடையாது. அவர்கள் மருத்துவம் பார்க்க நகர்புறங்களை நாட வேண்டி இருந்தது. 
                  • இதை கருத்தில் கொண்டு கிராமபுறங்களுக்கு அரசு, ஆரம்ப சுகாதார மையங்களை மக்கள் இலவசமாக சிகிச்சை பெற ஆரம்பித்தது. 
                  • முதலில் மந்தைவெளியில் போதிய  இட வசதி இன்றி நடத்தப்பட்ட மருத்துவமனை. இன்று குதிரைகோயில் தெருவில் கட்டிட விரிவாக்கம் செய்து நடந்துவருகிறது.
                    • 24 மணி நேர மருத்துவ வசதி
                    • அவசர சிகிச்சை பிரிவு
                    • நோயாளிகளுக்கு படுக்கைகள்
                    • குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகள்
                    • கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவ வசதி
                  என இன்று சுற்று வட்டார  கிராம மக்களின் உயிர்காக்கும் தோழனாய் அசூர வளர்ச்சியுடன் காணப்படுகிறது. 

                  அரசு கால்நடை மருத்துவமனை
                  • அய்யனார் தெரிச்சியில் செல்லியம்மன் கோயிலுக்கு எதிர்புறம் அமைந்துள்ளது அரசு கால்நடை மருத்துவமனை.
                  • கிட்ட தட்ட அமைதியான சூழல், கொள்ளிட கரையோரம் அமைத்துள்ளதால் சுற்று வட்டாரங்களில் இருந்து கொண்டுவரப்படும், கால்நடைகளான மாடு, கோழி, ஆடு, நாய், என அனைத்தும் காத்திருக்க அகண்ட இடவசதியுடன் காணப்படுகிறது 
                   
                    • இங்கு மாடுகள் செயற்கை முறையில் கருத்தரித்தல் 
                    • எலும்பு முறிவு சிகிச்சை 
                    • மற்றும் நோய்தடுப்பு ஊசிகள் வழங்கபடுகின்றன.

                  நியாயவிலை கடை 
                  • அரசு சார்பாக நடத்தப்படும் நியாயவிலை கடை ஊரின்  தொடக்கத்தில் அரசு மேல்நிலை பள்ளிக்கு எதிர்புறம் அமைந்துள்ளது.


                  • அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகலாய் கொடுக்கும் இலவச அரிசி இங்கு வழங்கப்படுகிறது.
                  • மலிவுவிலையில் அரசே நேரடி விற்பனையில் உணவு பொருட்களான பருப்பு, பாமாயில், சர்க்கரை, உளுந்து, மண்ணெண்ணெய் ஆகியவற்றை தரமாகவும் நியாயமாகவும் இதற்க்கு வழங்கப்படுவதால் நியாயவிலை கடை என்று பெயர்.
                  G.K.மூப்பனார்  நினைவு அரங்கமேடை
                  • வீரமாங்குடி மந்தைவெளியின்  மத்தியில் மறைந்த தலைவர்  G.K.மூப்பனார் அவர்களின் நினைவாக மத்திய கப்பல் துறை அமைச்சர் G.K.வாசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டின் கீழ் அரங்கமேடை கட்டப்பட்டு வருகிறது. 
                  • வீரமாங்குடி மந்தைவெளியில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இயங்கி வந்தது, பின்பு அதுவே ஆரம்ப சுகாதார மையமாய் மாறி அரசு மருத்துவமனையாய் இயங்கிவந்தது, நாளடைவில் வானொலி மன்றமாய் மாறி தொலைக்காட்சி ஓளிபரப்பு நிலையமாய் இயங்கியது. பின்பு கிராம நூலகம் இயங்கிவந்தது, ஒவ்வொன்றும் மாற்று கட்டிடம் அமைக்கப்பட்டு இடம் பெயர, இந்த  கட்டிடம்  பராமரிப்பின்றி பழுதடைந்து போக, இப்பொழுது கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டு அரங்க மேடை கட்டப்பட்டுவருகிறது.
                  • இங்கு  85களில் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது மூன்றாம் வகுப்பிற்கு ஆசிரியராய் இருந்த ஈச்சங்குடியை சேர்ந்த கபிரவேள் வாத்தியார் கைவண்ணத்தில் உருவான மேடை மந்தைவெளியில் அமைக்கபெற்று ஆண்டுவிழா ஆட்டமும் பாட்டமுமாய் அரங்கேறும்.
                  • அவ்வப்போது தற்காலிக மேடை அமைக்கப்பட்டு விழா நாட்களில் பட்டிமன்றங்கள்  ஆர்கெஸ்ட்ரா, அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் நடந்த வண்ணம் இருக்கும். 
                  • இந்த நிரந்தர மேடையின் மூலம் அனைத்து நிகழ்சிகளும் தங்கு தடையின்றி நடக்க ஏதுவாய் அமையும்.

                  No comments:

                  Post a Comment